நடிகை சமந்தாவின் அண்ணன் இவர் தான்.. புகைப்படத்துடன் இதோ..!

0

நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் உடல்நிலை காரணமாக தொடர்ந்து படங்கள் நடிக்காமல் இருக்கிறார். கடைசியாக இவர் நடித்த குஷி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்துள்ள சமந்தா, சிட்டாடல் எனும் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வெப் தொடருக்கான மிகவும் கடுமையான சண்டை பயிற்சிகளையும் சமந்தா மேற்கொண்டுள்ளார். ஒரு முறை படப்பிடிப்பின் போது மயங்கிவிழுந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

மயோசிடிஸ் நோயில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சமந்தா, விரைவில் முழு வீச்சியில் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சோகத்தில் இருந்த சமந்தாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

சமந்தாவின் அண்ணன்
நடிகை சமந்தாவின் தாய், தந்தையின் புகைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், சமந்தாவுடன் பிறந்த அவருடைய அண்ணனை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

இந்நிலையில், தனது அண்ணன் உடன் நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சமந்தாவிற்கு மொத்தம் இரண்டு அண்ணன்கள். இதில் மூத்த அண்ணன் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Leave A Reply

Your email address will not be published.