துணை இயக்குனருடன் ஷங்கர் மகள் திருமணம்.. மகிழ்ச்சியுடன் கூறிய அதிதி ஷங்கர், மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ..

0

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக விருமன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து மாவீரன் படத்தில் நடித்தார். இப்படத்திற்கு பின் தற்போது இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.ஐஸ்வர்யா ஷங்கர்
ஷங்கரின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

திருமணமாகி 6 மாதத்தில் ரோஹித் போக்ஸோ வழக்கில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதனால் ஐஸ்வர்யா ஷங்கர் மற்றும் ரோஹித் இருவருக்கும் விவாகரத்து செய்துகொண்டனர் என கூறப்பட்டது. விவாகரத்துக்கு பின் தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடி வந்தாராம் ஷங்கர்.

இரண்டாம் திருமணம்
இந்நிலையில், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆம், நேற்று ஐஸ்வர்யா – தருண் ஜோடியின் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததுள்ளதாம்.

தனது அக்கா மற்றும் மாமாவின் நிச்சயதார்த்தம் புகைப்படத்தை நடிகை அதிதி ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

Leave A Reply

Your email address will not be published.