டிடி வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டம்.. அக்கா பிரியதர்ஷினி போட்டுடைத்த உண்மை..!

0

தொகுப்பாளர் டிடியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரையில் பெரிய அளவில் பாப்புலரான தொகுப்பாளராக இருந்து வரும் அவர் தற்போது பட விழாக்கள், விருது விழாக்கள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
டிடியின் அக்கா பிரியதர்ஷினி தற்போது சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். டிடி பற்றி சமீபத்திய பேட்டியில் பிரியதர்ஷினி பல்வேறு விஷயங்களை கூறி இருக்கிறார்.

வாழ்க்கையில் பல்வேறு துன்பம்
டிடி வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து இருக்கிறார். விவாகரத்து ஒருபக்கம், உடலில் இருக்கும் பிரச்சனை இன்னொரு பக்கம் என டிடிக்கு சிக்கல் இருக்கிறது. மறுபுறம் சமூக வலைத்தளங்களில் வரும் மோசமான கமெண்டுகளை டிடி தைரியமாக எதிர்கொண்டு வருகிறார்.

டிடி காலில் பிரச்சனை இருக்கிறது. ஆனாலும் அவர் தொடர்ந்து வேலை செய்துகொண்டு தான் இருக்கிறார். இத்தனை பிரச்சனைகள் வேறு யாருக்காவது வந்திருந்தால் மீண்டு வந்திருப்பார்களா என தெரியாது என கூறி இருக்கிறார்.

மேலும் டிடியின் மறுமணம் பற்றி அடிக்கடி வரும் வதந்திகளை பற்றி பேசிய அவர், அதை பற்றி டிடி தான் முடிவெடுக்க வேண்டும், கட்டாயப்படுத்தி செய் என சொல்ல முடியாது என கூறி இருக்கிறார் அக்கா பிரியதர்ஷினி.

Leave A Reply

Your email address will not be published.