மனைவியின் மர்மமான மரணம்.. வழக்கில் இருந்து நாகேஷை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்!! ரகசியத்தை உடைத்த பிரபலம்..!

0

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் நாகேஷ், இவருடைய படங்கள் எல்லாம் காலம் கடந்தும் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நாகேஷ் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், மிகவும் கஷ்டப்பட்டு தான் நாகேஷ் சினிமாவில் நுழைந்தார். நாகேஷின் நடிப்பு ஆற்றலை கவனித்த கே பாலச்சந்தர் தொடர்ந்து நாகேஷ் தனது படங்களில் நடிக்கவைத்தார். சர்வர் சுந்தரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக நாகேஷுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து ஓய்வு இல்லாமல் படங்களில் நடித்து வந்ததால் சற்று ஓய்வுக்காக மது அருந்த ஆரம்பித்துவிட்டார். ஒரு பக்கம் சினிமாவில் பிஸி, மறுபக்கம் மது பழக்கம் இப்படி இருக்கும் சூழ் நிலையில் நாகேஷ் குடும்பத்தை கவனிக்க தவறிவிட்டார்.

நாகேஷின் மனைவி மர்மமான முறையில் இறந்தார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனையில் இருந்து நாகேஷை எம்.ஜி. ஆர் தான் காப்பாற்றினார் என்று ஒரு மூத்த பத்திரிகையாளர் என்னிடம் கூறியிருந்தார்.

சினிமாவை தாண்டி நாகேஷ் தனிப்பட்ட வாழ்க்கையில் கொஞ்சம் கர்வம் புடித்தவராக தான் இருப்பார் என்று பல பிரபலங்கள் கூறியுள்ளனர். மேலும் நாகேஷ் பள்ளி கூடம் அருகே திரையரங்கு காட்டினார். அந்த திரையரங்குக்கு NOC கொடுக்கவில்லை. அது பிரச்சனையாக மாறியது. அந்த சமயத்தில் எம்.ஜி. ஆர் தான் NOC வாங்கி கொடுத்தார்.நாகேஷ் தியேட்டர் என்றாலே பிரபலம். இப்பொது கல்யாண மண்டபமாக மாறிவிட்டனர் என்று செய்யாறு பாலு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.