கோலாகலமாக நடக்கும் விஜயகுமார் பேத்தியின் திருமண விழா.. வைரலாகும் புகைப்படங்கள்..!

0

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமண விழா கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.நடிகர் விஜயகுமார்
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் நடிகர் விஜயகுமார். இவரது முதல் மனைவிக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்று மூன்று மகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் டாக்டருக்கு படித்தவரான இவர் தனது கல்லூரியில் படித்த கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவரது மகள் தியாவின் திருமண விழா கொண்டாட்டம் ஆரம்பித்துள்ளது. இவரது திருமணம் வருகிற பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற உள்ளது.

தியாவின் திருமணத்திற்காக அனிதா வெளிநாட்டிலிருந்து கடந்த மாதமே வந்துள்ளார். மகளின் திருமணத்தினால் பிஸியாக அழைப்பிதழ் கொடுத்து வந்துள்ளார்.

இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ள நிலையில், நேற்று பந்தக்கால் நடும் விழா நடைபெற்ற நிலையில், இதில் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இந்நிகழ்வின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.