காதலில் விழுந்த த்ரிஷா – காதலர் தினத்தன்று என்ன செய்தார் தெரியுமா நீங்களே பாருங்க ?

0

நடிகை த்ரிஷா காதலில் விழுந்து விட்டதாக சமூக ஊடகங்களில் பல செய்திகள் பரவி வருகின்றது.நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா.இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் என ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து வைத்துள்ளார்.இவர் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே நடித்து வருகிறார்.கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறைக்கு வந்தார்.லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அன்றிலிருந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்து இன்று வரையில் அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.நடிகை த்ரிஷாவிற்கு 40 வயதை தாண்டி விட்டபோதிலும் இது வரையில் அவர் திருமணம் செய்துக்கொள்ளாமலே இருக்கிறார்.இந்நிலையில் இவர் காதலில் விழுந்துவிட்டதாக ஒரு சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காதலில் விழுந்த த்ரிஷா
நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு பல பிரபலங்களும் காதலர் தினத்தை கொண்டாடியிருந்தார்கள். பலரும் அவர்களது ஜோடியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்கள்.

ஆனால் த்ரிஷா கையில் ரோஜா பூங்கொத்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், த்ரிஷா காதலில் இருப்பதை மறைமுகமாக தெரிவிக்கிறார் என இணையத்தில் பேசி வருகின்றார்கள்.

மேலும் நடிகை த்ரிஷா காதலில் இருப்பது உண்மை என்றால் கூடிய விரைவில் காதலரை அறிமுகப்படுத்துமாறு ரசிகர் பட்டாளம் கமெண்ட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

Leave A Reply

Your email address will not be published.