சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் முத்துவின் பாட்டி யார் தெரியுமா.. எம்.ஜி.ஆர் உடன் நடித்துள்ளாராம்..!

0

சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது TRP-யில் அதிக ரேட்டிங் பெற்று வருகிறது. விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் என்றும் கூறப்படுகிறது.இந்த சீரியலில் ஹீரோ முத்துவின் பாட்டியாக நடிகை ரேவதி நடித்து வருகிறார். இந்த சீரியலில் மக்கள் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று முத்துவின் பாட்டி கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பார் ரேவதி பாட்டி.

ரேவதி பாட்டி
சிறகடிக்க ஆசை சீரியல் மட்டுமின்றி மௌன ராகம் போன்ற பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையில் கலக்கி வரும் ரேவதி பாட்டி ஒரு காலத்தில் வெள்ளித்திரையிலும் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆம், நடிகர் சிவகுமாருக்கு முதல் ஜோடியாக நடித்தவர் இவர் தான். அதுமட்டுமின்றி தனிப்பிறவி என்கிற படத்தில் எம்.ஜி.ஆருக்கு தங்கையாகவும் நடித்துள்ளார். தனது இளம் வயதில் இருந்து தற்போது 80வயது வரை வெள்ளித்திரை சின்னத்திரை என கலக்கி வருகிறார் ரேவதி பாட்டி.

Leave A Reply

Your email address will not be published.