விஜயால் ஏற்பட்ட அந்த அவமானம்.. பகீர் கிளப்பிய ஷாஜகான் நடிகர்..மக்களே என்ன மன்னிச்சிடுங்க !

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.இரட்டை வேடத்தில் விஜய் நடித்து வரும் இந்த திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகின்றது.இந்த நிலையில் அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் , நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கவுமுள்ளார்.90 களில் வெளியான தளபதியின் பல திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

அந்த வகையில் 2001 ஆம் ரவி என்பவர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘ஷாஜகான்’.நண்பனுக்காக தனது காதலை வெளியே சொல்லாமல் இருக்கும் அழகிய ஒரு தலை காதல் கதை. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகர் கிருஷ்ணாஇதில் படத்தின் இரண்டாவது ஹீரோவாக நடித்தவர் கிருஷ்ணா. கேரளாவை சேர்ந்த இவர் ஷாஜகான் திரைப்படம் உற்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிப்பபில் இருந்து விலகியிருக்கும் அவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜயை தொடர்புகொள்ள நினைத்தபோது அவருக்கு நேர்ந்த அவமானம் குறித்து தெரிவித்துள்ளார்.அவர் குறிப்பிடுகையில், “நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த போது, சில கிலோமீட்டர் தொலைவில் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தார். அதனை கேள்விப்பட்ட நான் அவரை தொடர்புகொள்ள நினைத்தேன்.என்னுடைய மேனேஜர் மூலம் விஜய்யின் மேனேஜர் நம்பரை வாங்கி அந்த நம்பருக்கு தொடர்புகொண்டு நான் ஷாஜகான் படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்திருக்கிறேன். அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொன்னேன்.

அதற்கு அவரோ நீங்கள் நினைப்பது போல் ஷாஜகான் சமயத்தில் இருந்த விஜய் இப்போது கிடையாது. அவருடைய இடமே வேறு. வேறு லெவலில் இருக்கிறார்.அவரை நீங்கள் எல்லாம் பார்க்க முடியாது என்று கூறினார்.அது எனக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது, நான் ஏதோ வெளியிலிருந்து வந்தவன் இல்லை.விஜய்யுடன் சக நடிகனாக பணியாற்றியவன் நான், அப்படி இருக்கும்போது அவரை பார்க்க முடியாது என்று சொன்னது எனது மனதை ரொம்பவே கஷ்டப்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.