ஷாருக்கானுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்…!

0

ஷாருக்கான்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மூன்று திரைப்படங்கள் வெளிவந்தது.இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு திரைப்படங்களும் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்திய பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைத்தது.

மேலும் அடுத்ததாக இயக்குனர் சுஜாய் கோஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் ஷாருக்கான் நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

ஷாருக்கானுடன் கீர்த்தி சுரேஷ்
நமக்கு பிடித்த, நம் மனதை கவர்ந்த நட்சத்திரங்களை பார்க்கபோது, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பது இயல்பு தான்.

அப்படி நடிகர் ஷாருக்கான் உடன் நடிகை கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

Leave A Reply

Your email address will not be published.