16 வயதினிலே படத்தில் நடித்த டாக்டரா இது? தற்போதைய நிலை என்ன..?

0

16 வயதினிலே படத்தில் நடித்த டாக்டரை பற்றி பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.16 வயதினிலே
பாரதிராஜா இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த படம் 16 வயதினிலே. இந்தப் படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.இந்த படத்தில் ரஜினி பரட்டை என்ற கதாபாத்திரத்திலும், கமல் சப்பானி என்ற கதாபாத்திரத்திலும், கதாபாத்திரத்திலும், மயில் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.சப்பானி மயிலை விரும்புகிறார். மயிலை அடைய வேண்டும் என்று வில்லன் பரட்டை நினைக்கிறார். எப்படியோ சப்பாணி, பரட்டையை கொன்று மயிலை காப்பாற்றி விடுகிறார்.

இறுதியில் சப்பாணியை போலீஸ் கைது செய்து செல்கிறது. அப்போது ரயில்வே ஸ்டேஷனில் மயில், சப்பானி வரும் வரை வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன் என்று கூறுகிறார்.

இதுவே படித்தின் மீதி கதை. அந்த வகையில் இந்த படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் சத்யஜித்.யார் இந்த சத்யஜித்?கர்நாடகாவை சேர்ந்தவர் சத்யஜித். இவரைப் பற்றி செய்தித்தாளில் பாரதிராஜா பார்த்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர் 16 அதற்கு படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்த படத்தில் இவர் பேசும் ஆங்கிலம் பார்வையாளர்கள் மத்தியில் பிரமிக்க வைத்ததென்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார்.இன்னும் 16 வயதினிலே டாக்டரை யாராலும் மறக்க முடியாது என்று சொல்லலாம்.ஆனால், இந்த படத்திற்கு பிறகு இவருக்கு சரியாக இந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பின் இவர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

கடைசியாக இவர் 2022 ஆம் ஆண்டு ஒரு கன்னட படத்தை இயக்குவதாக பேட்டி அளித்திருந்தார். அதற்குப்பின் இவரை குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.