அந்த காலத்திலேயே சென்னை பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட எம்ஜிஆர் படங்கள்- எந்தெந்த படங்கள் தெரியுமா?

0

எம்ஜிஆர்
எம்ஜிஆர், இந்த பெயருக்கு ஒரு அறிமுகம் தேவையா என்ன, இப்போது உள்ள குழந்தைகளுக்கு கூட கண்டிப்பாக இவரை தெரிந்திருக்கும்.திரையிலும், அரசியலிலும் மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்தவர், இவர் அளவுக்கு வேறு யாரும் இல்லை என்றே கூறலாம்.

1936ல் சதிலீலாவதி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமான எம்ஜிஆர் 1978ல வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 136 திரைப்படங்களில் நடித்தார்.

136 திரைப்படங்களில் சுமாராக 114 திரைப்படங்களில் எம்ஜிஆர் நாயகனாக நடித்துள்ளார். எம்ஜிஆருக்கு 1958ல் வெளியான நாடோடி மன்னனுக்குப் பிறகு அவரது படங்கள் தனிக்கவனம் பெற ஆரம்பித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் படங்கள்
சரி இப்போது டாப் நடிகரின் படங்கள் சென்னையில் எவ்வளவு வசூலித்தது என்பதை பார்த்து வரும் நிலையில் அந்த காலத்தில் எம்ஜிஆர் நடித்த எந்தெந்த படங்கள் வசூல் சாதனை செய்துள்ளது என்பதை காண்போம்.சென்னையில் அதிக வசூல் சாதனை செய்த எம்ஜிஆரின் படங்கள்,எங்க வீட்டுப் பிள்ளை (1965)
அடிமைப் பெண் (1969)
மாட்டுக்கார வேலன் (1970)
ரிஷாக்காரன் (1971)
உலகம் சுற்றும் வாலிபன் (1973)
இதயக்கனி (1975)
மீனவ நண்பன் (1977)
இன்று போல் என்றும் வாழ்க (1977)

Leave A Reply

Your email address will not be published.