திருமணத்தின் போது ரோபோ ஷங்கர் எப்படியிருந்தார் தெரியுமா? அரிய புகைப்படம் இதோ..!

0

நடிகர் ரோபோ சங்கர் திருமணத்தின் போது எடுக்கப்பட்டு அரிய புகைப்படம் வைரலாகி வருகின்றது.ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வரும் ரோபோ சங்கர், பிரபல ரிவியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பிரபல ரிவி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் தனி இடத்தினை பிடித்த இவர், தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றார்.

ரோபோ ங்கர் கடந்த ஆண்டு மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு உடல் எடை மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.அதிலிருந்து மீண்டு தற்போது தனது வேலையை பார்த்து வரும் ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு கிளி வளர்த்து அதனால் பிரச்சினையில் மாட்டிக் கொண்டார். பின்பு அபாராத தொகையை கட்டி அந்த பிரச்சினையிலிருந்து மீண்டதுடன், கிளியையும் அரசிடம் ஒப்படைத்தார்.

வைரலாகும் திருமண புகைப்படம்
தற்போது உடல் எடையை பழைய நிலைக்கு கொண்டு வந்து மனைவி மற்றும் மகளுடன் அவ்வப்போது ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றார்.

ரோபோ சங்கர் எந்த சமூக வலைத்தளங்களிலும் அக்கவுண்டுகளை வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் தன்னுடைய மனைவி மற்றும் மகளின் சமூக வலைத்தள பக்கங்களில் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் இவரது திருமணததின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. என்னதான் கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து நம்முடைய முயற்சிகள் இருந்தால் மீண்டும் வந்துவிடலாம் என்ற உதாரணத்திற்கு ரோபோ சங்கர் கடந்து வந்த கஷ்டங்களே எடுத்துக்காட்டாகும்.

Leave A Reply

Your email address will not be published.