11 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா பட நடிகை.. இவர் யார் தெரியுமா?

0

இஷா தியோல்
தமிழ் சினிமாவில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான, “ஆயுத எழுத்து” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் இஷா தியோல்.இந்த திரைப்படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் இஷா தியோல் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ரஹ்மானின் ஒரே பாடலில் பிரபலமான இஷா தியோல், கடந்த 2012ம் ஆண்டு பள்ளி பருவ காதலரான “பரத் தக்தானி” என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் முடிந்து சரியாக 11 ஆண்டுகள் நிறைவான நிலையில் தற்போது இவர்களுக்கு ராத்யா, மிராயா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

விவாகரத்து
இந்த நிலையில், இஷா தியோல் – பரத் தக்தானி இருவரும் தன்னுடைய திருமண வாழ்க்கையை முடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் இந்த முடிவு பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும், இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதால் எந்த பிரச்சினையும் இல்லை என இருவரின் பிரிவை ஓபனாக அறிவித்து விட்டனர்.பாலிவுட்டில் கொடிக்கட்டி பறப்பார் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டுக்கு பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை. மாறாக தற்போது 42 வயதாகும் இஷா, டிவி நிகழ்ச்சிகளில் தலை காட்ட ஆரம்பித்துள்ளார்.

இவரின் பயணம் இனி வரும் காலங்களில் எப்படி இருக்க போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.இதே வேளை, இஷா தியோல் நடிகை ஹேமாமாலினியுடைய மூத்த மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.