106 கிலோ உடல் எடையில் விஜய்யின் தம்பி! மனைவி கூறிய ஒற்றை வார்த்தை…!

0

விக்ராந் தனது 106 கிலோ எடையை குறித்து மனைவி கூறிய வார்த்தையால் மனம் கலங்கியுள்ளார்.நடிகர் விக்ராந்த்தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களுள் விக்ராந்த்தும் ஒருவர். இவர் தளபதி விஜய்யின் சித்தி பையன் என்பதால் இவருக்கு சினிமாத்துறையில் சுலபமாக வாய்ப்பு கிடைத்தது.இவர் விளையாட்டுத்துறையில் கவனம் செலுத்தி வந்ததால் சினிமாவில் அனுபவம் இல்லாமல் இருந்த நிலையில் இவரின் சினிமா பயணம் சுமாராகவே அமைந்தது.

விக்ராந்த் மனைவி
விக்ராந்த் நடித்த படங்களில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் பாண்டிய நாடு எனும் படமாகும்.

இதன் பின்னர் இவர் கவண், தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது றஜினிகாந்த் உடன் லால் சலாம் படத்தில் இணைந்துள்ளார்.தன்னுடைய சினிமா பயணத்தை பற்றி விக்ராந்த் பேசியுள்ளார். அவர் கூறியது ‘நான் கிரிக்கெட் தான் வாழ்க்கை என அதில் முழு கவனம் செலுத்தினேன். ஆனால் அது பெரிதான வாய்ப்பை எனக்கு தரவில்லை. இதற்கு பிறகு தான் சினிமாத்துறைக்குள் செல்ல முடிவெடுத்து உள்ளே சென்றேன்.

அந்நிலையில் எனக்கு வயது 20 தான் சினிமாவில் பெரிதாக அனுபவம் இல்லாததால் எனக்கு அது கஷ்டமாக இருந்தது.வெளியில் இருந்து பார்ப்பது போல் இல்லை சினிமாவின் உள்ளே வந்தால் தான் தெரிகிறது சினிமா எவ்வளவு கஷ்டம் என்று கூறுவார்கள்.

சினிமாவில் எனது திறமையை வளர்த்துக் கொள்ள எனக்கு 10 வருடங்கள் ஆகியது. நான் நல்ல படங்களுக்காக முயற்சி செய்து கொண்டிருந்த போது எனது எடை 106 கிலேவாக இருந்தது.அப்போது எனது மனைவி என்னை பார்த்து கூறிய வார்த்தைகள் என்னை கலங்க வைத்தது. எனது மனைவி மானசா, ‘உன்னை கண்ணாடியில் பார். என்னிடம் பணம் இருந்தால் கூட, இப்படி இருக்கக்கூடிய நடிகரை வைத்து படம் எடுக்கமாட்டேன்.

அப்படி இருக்கும் போது, நீ ஏன் வெளியே சென்று வாய்ப்புகளை தேடுகிறாய்’ என்று கேட்டாள். அதற்கு பின்னர் தான் நான் என்னுடைய வழிகளை மாற்றி முயற்சிகளை சரிவர செய்தேன் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.