என் மறுபாதி நீ…. உன்னை ரொம்ப மிஸ் பன்றோம்.. பவதாரிணியை நினைத்து வருந்தும் சகோதரி!கச்சேரியில் பாடும் வீடியோ..!

0

பிரபல பாடகி பவதாரணி காலமான நிலையில், அவரது மறைவை மறக்க முடியாமல் அவரது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.பாடகி பவதாரணி
தமிழ் திரையுலகில் “ராசையா” என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் நான் பவதாரிணி. தேசிய விருது பெற்ற இந்த பாடகி மிகப்பெரிய இசை குடும்பத்தில் இருந்து வந்தவர்.தனது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவருடைய இசையிலேயே பெரிய அளவில் பாடல்களை பாடியுள்ளார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார்.பவதாரணியின் மறைவிற்கு திரையுலகினர் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி பவதாவை உறவினர்கள் வழியனுப்பினர்.

என் மறுபாதி நீ… வருந்தும் சகோதரி
இந்நிலையில் இளையராஜாவின் சகோதரரான பாஸ்கர் அவர்களுடைய மகள் வாசுகி பாஸ்கர் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

அந்த பதிவில் பவதாரணி தன்னுடைய சரிபாதி என்றும், வாழ்க்கையின் மறு புறத்தில் உன்னை சந்திக்கிறேன் என்றும் நாங்கள் அனைவரும் உன்னை மிகவும் மிஸ் செய்கிறோம் என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவோடு இணைந்து பவதாரணி ஒரு இசை கச்சேரியில் பாடிய வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார் வாசுகி பாஸ்கர்.

Bhavatha ❤️ pic.twitter.com/fZsL6qsQO1

— vasuki bhaskar (@vasukibhaskar) February 5, 2024

Leave A Reply

Your email address will not be published.