மஞ்சுளா மறுஜென்மம் எடுத்துவிட்டாரா? நடிகை மஞ்சுளாவாக மாறிய ஜோவிகாவின் வைரல் புகைப்படம்..!

0

வனிதாவின் மகள் ஜோவிகா தனது பாட்டி மஞ்சுளாவை பிரதிபலிக்கும் விதமாக எடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.ஜோவிகா
விஜயகுமார் – மஞ்சுளா நட்சத்திர ஜோடிகளின் மூத்த மகளான வனிதா விஜயகுமார், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிய இவர், தனது உடன்பிறப்புகள் யாரிடமும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கின்றார்.ஆனாலும் அவ்வப்போது அவர்கள் மீதுள்ள பாசத்தை வெளிக்காட்டியும் வருகின்றார். இந்நிலையில் வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.

பின்பு பாதியில் வெளியேற்றப்பட்ட இவருக்கு படிப்பில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. ஆதலால் இவர் விருப்பத்திற்கு வனிதா உறுதுணையாக இருந்து வருகின்றார்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபனிடம் துணை இயக்குனராக இருந்து வருகின்றார் ஜோவிகா. எடிட்டிங் உட்பட பல வேலைகளையும் கற்றுக் கொண்டுள்ளார்.

ஜோவிகாவின் சினிமா ஆசையை நிறைவேற்ற அவரது தாய் வனிதா தீவிரமாக முயற்சி செய்து வருகின்றார். மகளை வைத்து போட்டோ ஷுட் எடுத்தும் வெளியிட்டுள்ளார்.

பாட்டி மஞ்சுளாவாக ஜோவிகா
இந்நிலையில், கண்ணைக் கட்டும் கவர்ச்சியில் புகைப்படம் எடுத்தது மட்டுமின்றி, 60’ஸ் மற்றும் 70’ஸ் கெட்டப்பிலும் ஜோவிகா காணப்படுகின்றார்.

அதாவது இவரது பாட்டியும் நடிகையுமான மஞ்சளாவின் மறுஜென்மம் போன்று பேரழகியாக ஜோவிகா காணப்படுகின்றார்.இதனை அவதானித்த ரசிகர்கள் பலரும் மஞ்சுளாவின் மறுஜென்மம் என்று கருத்து தெரிவிதது வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.