நிச்சயம் முடிந்த கையோடு இந்திரஜா செய்த அலப்பறைகள்.. தீயாக பரவும் காணொளி..!

0

நிச்சயம் செய்த பின்னர் இந்திரஜா செய்த செயல் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வைரலாகி வருகின்றது.ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவிலுள்ள நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ரோபோ சங்கர்.இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான “மாரி” படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

இப்படியொரு நிலையில் ரோபோ சங்கருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

நிச்சயத்தில் அலப்பறை செய்த இந்திரஜா
இந்த நிலையில் சினிமாவில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் குடும்பமாக சேர்ந்து சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் செய்ய போவதாக அவரே கூறி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாமன் கார்த்திக் உடன் நிச்சயதார்த்தம் பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில் இடம்பெற்றது.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. இப்படியொரு நிலையில், தற்போது இந்திரஜா தன்னுடைய வருங்கால கணவருக்கு வாயில் முத்தம் கொடுத்த காணொளி வைரலாகி வருகின்றது.சொந்தங்கள் கூடியிருக்க இந்திரஜா இப்படி நடந்து கொள்வது அவருடைய மாமா மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்பதனை உணர்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.