பு ற் றுநோய் பாதிப்பு, அனுபவித்த கஷ்டம்- சீரியல் நடிகர் சாய்ராம் எமோஷ்னல் பேட்டி..!

0

நடிகர் சாய்ராம்
சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் சாய்ராம்.பாடகராக தனது பயணத்தை தொடங்கியவர் இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பான தொடங்களில் நடித்து இருக்கிறார்.கடைசியாக இவர் நடித்த தொடர் என்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பான நீதானே என் பொன்வசந்தம் தான்.

நடிகரின் பேட்டி
இந்த நிலையில் நடிகர் சாய்ராம் தனது வாழ்க்கையில் நடந்து ஒரு மோசமான விஷயம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், எனது கேரியரை பாடகராக தான் தொடங்கினேன், ஒரு காலத்தில் ரொம்ப பிஸியாக இருந்தேன்.

அப்போது சீரியல்கள் வாய்ப்பு கிடைக்க இரண்டையும் செய்துவந்தேன். தொடர்ந்து நிறைய சீரியல்கள் நடித்து வந்தேன், பல தொடர்கள் எனக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. 2012ல் என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப மோசமான காலம் என்றே கூறலாம்.

எனக்கு கணைய புற்றுநோய் இருக்கும் விஷயம் தெரிந்தது, என்னுடைய குடும்பம், நண்பர்கள், மருத்துவர்கள் கொடுத்த ஊக்கம் தான் இன்றைக்கு நன்றாக இருக்கிறேன்.அந்த சமயம் கிரியா யோகா ரெகுலராக பண்ணிக் கொண்டிருந்தேன். அதுவும் எனக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுத்தது. நான் இப்போ கேன்சர் சர்வைவர் தான் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.