பவதாரணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா! இறப்பதற்கு ஒருநாள் முன்பு நெகிழ்ச்சி..!

0

பிரபல பாடகியும் சிறந்த இசையமைப்பாளருமாகிய இளையராஜாவின் மகளான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.இலங்கையில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.இவரின் இழப்பு பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலகினர் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் இலங்கையில் இறந்ததை தொடர்ந்து இவரது உடலை சென்னைக்கு கொண்டு வந்து பின்னர் தேனியில் இளையராஜாவின் மனைவி தாய்குமிடையில் அடக்கம் செய்யப்பட்டது.

பவதாரணியின் கடைசி ஆசைபாடகி பவதாரணிக்கு தான் இறக்கப்போவது கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு முன்பே தெரிந்திருக்கிறது.இதனால் தான் பவதாரணி இந்த விஷயம் தெரிந்ததில் இருந்து தனது குடும்பத்துடன் தனது நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் வெங்கட்பிரபுவும் பவதாரணியுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.பவதாரணிக்கு தனது தந்தை இளயராஜா என்றால் உயிர். இளையராஜா இலங்கையில் நடக்க இருந்த இசைநிகழ்ச்சிக்காக தன்னை தயார்படுத்தி கொண்டு இருந்தார்.அப்போது மருத்துவமனையில் இருந்த பவதாரணி தனது தந்தையை பார்க்க வேண்டும் என அடம்பிடித்துள்ளார்.

இதன் காரணமாக பவதாரணி தங்கியிருந்த அறைக்கு பக்கத்திலேயே இளையராஜாக்கும் அறை ஒதுக்கப்பட்டு அவர் அங்கே இருந்தபடி பவதாரணியைின் ஆசையை இளையராஜா நிறைவேற்றி உள்ளார்.இது மட்டும் இல்லாமல் இளையராஜா பவதாரணி இறப்பதற்கு முந்தய தினம் பவதாரணியுடன் இரண்டு மணிநேரம் இருந்துள்ளார்.இந்த தகவலை இலங்கைக்கு பவதாரிணி சிகிச்சைக்காக சென்றபோது அங்கு உதவியாளராக இருந்தவர் பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.