கண்டுகொள்ளாமல் கைவிட்ட பிரபல ரிவி… பணக்கஷ்டத்தில் தவிக்கும் மணிமேகலை..!

0

குக் வித் கோமாளி மணிமேகலை தற்போது பணக்கஷ்டத்தில் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.தொகுப்பாளினி மணிமேகலை
பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக வலம்வரும் மணிமேகலை, தனது கலகலப்பான பேச்சினால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.இவர் சில படங்களில் நடித்திருந்த நிலையில், குறித்த படம் சரியாக கைகொடுக்காததால், மீண்டும் சின்னத்திறையில் தனது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

இவர் ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் இவர் பணக்கஷ்டத்தில் தவித்து வந்த போது, பிரபல ரிவியில் தனது நடன திறமையை வெளிப்படுத்தி இரண்டாவது பரிசை தட்டிச் சென்றார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட கோமாளியாக அசத்தினார். பின்பு இனி கோமாளியாக வர போவதில்லை என்று வெளியேறினார்.பின்பு அந்நிகழ்ச்சிக்கு நடுவராகவும் வந்தார். தற்போது யூடியூப் மூலமும் பணம் சம்பாதித்து வரும் மணிமேகலை, 2 கார் மற்றும் வீடு என்று சென்னையில் வாங்கியதுடன், கிராமத்தில் பிரம்மாண்டமான வீடு ஒன்றையும் கட்டி வருகின்றார்.

பணக்கஷ்டம்
ஆனால் சமீப காலமாக இவருக்கு பிரபல ரிவியில் வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில், யூடியூப் வருமானமும் இல்லாமல் போயுள்ளது.எனவே தற்போது தன்னுடைய வீட்டின் ஹவுசிங் லோன் கூட கட்ட முடியாத சூழலில் இருப்பதாக, மணிமேகலை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மணிமேகலையின் இந்த நிலையை கண்டு, ரசிகர்கள் பலர் உங்களை விஜய் டிவி கை விட்டுவிட்டதா? என கேள்வி எழுப்புவதோடு தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.