விடுதலை படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு.. எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டிய பார்வையாளர்கள்..!

0

திரைப்பட விழா
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் திரைப்பட விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.கடந்த ஜனவரி மாதம் 25 தேதி தொடங்கிய இந்த விழா வருகிற பிப்ரவரி மாதம் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ் சினிமாவிலிருந்து ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம், வெற்றி மாறனின் விடுதலை 1 & 2 பாகம், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் அங்கு திரையிடப்படுகின்றன.

மாபெரும் வரவேற்பு
இந்நிலையில் விடுதலை படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். அது தொடர்பாக நடிகர் சூரி பதிவிட்டு இருக்கிறார்.

“நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2 க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள்

எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது!! தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது” என்று பதிவிட்டு இருக்கிறார்.

நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2 க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த

நெகிழ வைக்கும் பாராட்டு இது!! தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது… 🙏
#Viduthalaipic.twitter.com/ID1afWZjpC

— Actor Soori (@sooriofficial) February 1, 2024

Leave A Reply

Your email address will not be published.