கணவரை பிரிந்திருந்தாரா பவதாரணி?… கடைசி காலத்தில் நெகிழ வைத்த கணவர்! அடுத்தடுத்து வெளிவரும் உண்மை..!

0

இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணியின் திருமண புகைப்படங்களும், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்த தகவலும் வெளியாகியுள்ளது.பாடகி பவதாரணி
பிரபல இசையமைப்பாளரின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி(47) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சில தினத்திற்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.இவர் தனது கணவருடன் இலங்கையில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 5 மாதங்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் இவருக்கு கேன்சர் நான்காம் கட்டம் என்பதால் இனி மருத்துவம் பார்த்தும் பயனில்லை… அப்படியே விட்டுவிட மருத்துவர்கள் கூறிய நிலையில், எந்தவொரு மருத்துவமும் பார்க்காமல் இருந்துள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

பவதாரணியின் மறைவிற்கு திரையுலகினர் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி பவதாவை உறவினர்கள் வழியனுப்பினர்.

காப்பாற்ற துடித்த கணவர்
பவதாரிணியின் கணவர் குறித்த விவரங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. அதில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் பிரபல பத்திரிக்கையாளர் ராமச்சந்திரன் மகன் சபரி ராஜ் உடன் தான் பவதாரிணிக்கு கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் சில வருடங்கள் கழித்து பவதாரிணிக்கும் அவருடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து இருக்கின்றனர். பவதாரிணி தன்னுடைய கணவரை விட்டுவிட்டு தன்னுடைய அப்பா வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார்.ஆனால் கடைசி காலத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரிய வந்த பிறகு அவருடைய கணவர் சபரி ராஜ் பவதாரிணியோடு சேர்ந்து பல முயற்சிகளை செய்து அவரை காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தன்னுடைய மனைவியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பல சிகிச்சைகளுக்கும்அழைத்துச் சென்றதாகவும், கடைசியில் எந்தவொரு சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை என்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.பவதாரிணி தனக்கு குழந்தை இல்லை என்பதால் பெரிய வருத்தத்தில் இருந்த நிலையில் கடைசியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது வேதனையை அளிக்கின்றது. இந்த நிலையில் பவதாரிணியில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.