விஜயகாந்த் மகன் வாழ்க்கையில் மிகப்பெரிய உதவி செய்துள்ள பிரபல முன்னணி நடிகர்.. என்ன செய்துள்ளார் தெரியுமா..!

0

விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மரணம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.திரையுலகில் பல நட்சத்திரங்களை உயர்த்திவிட்டு விஜயகாந்தின் மகன் இதுவரை சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வராமல் இருக்கிறார். அதற்கான முயற்சியை அவர் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கிறார்.

ஷண்முக பாண்டியன்
கண்டிப்பாக விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியனுக்கு திரையுலகில் இருந்து உதவவேண்டும் என ராகவா லாரன்ஸ் உள்பட பலரும் கூறினார்கள். ஷண்முக பாண்டியன் படத்தில் நான் கேமியோ ரோலில் நடிக்கிறேன், அது அந்த படத்திற்கும், விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியனுக்கும் நான் செய்யும் கைமாறாக இருக்கும் என ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.

ராகவா லாரன்ஸ் செய்த விஷயம்
அதன்படி, தற்போது ஷண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்து வரும் படைத்தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் ராகவா லாரன்ஸ். படைத்தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்காக 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸின் இந்த விஷயத்தை திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள். மேலும் ராகவா லாரன்ஸ் போலவே இன்னும் பலரும் ஷண்முக பாண்டியனுக்கு கைகொடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.

குறிப்பாக விஜய் போன்ற நட்சத்திரங்கள் இதை செய்யவேண்டும் என்பதே ரசிகர்கள் பலருடைய கருத்தாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.