ஆடிஷனுக்கு போகும் இடத்தில் அப்படி நடக்கும், நிறைய கஷ்டங்கள்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை வெளிப்படை..!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கோமதி பிரியா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனக்கு சினிமாவில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் மாடலிங் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

மாடலிங் செய்து கொண்டு சினிமா வாய்ப்பை தேடி கொண்டு இருந்தேன். ஒரே சமயத்தில் இரண்டையும் பார்த்துக்கொள்ள முடியவில்லை. அதனால் முழு நேரம் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

ஆடிஷன் செல்லும் போது என்னை பார்த்து, இந்த பொண்ணு பார்க்க பாவமா இருக்கு..எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பாரா என்று எல்லாரும் யோசிப்பாங்க.. பல இடங்களில் அவமானம் சந்தித்து இருக்கிறேன்.

அதனால் சோர்ந்து விடக்கூடாது எனக்கு நானே சொல்லிப்பேன் என்று கோமதி பிரியாகூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.