ஒரே ஒரு வீடியோவால் தற்கொலை செய்ய முயன்றுள்ள பிரபல நடிகை அனுயா- திடுக்கிடும் தகவல், காப்பாற்றியது ?

0

நடிகை அனுயா
ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சிவா மனசுல சக்தி.அந்த படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அனுயா பகவத்.முதல் படமே வெற்றிகரமாக அமைய அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்த அனுயாவின் சினிமா பயணத்திற்கு ஒரு பெரிய பிரச்சனையாக அமைந்தது ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்கள்.

பாடகி சுசித்ரா வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது நமக்கு நன்றாகவே தெரியும். இதனால் அனுயா பகவத் சர்ச்சையில் சிக்க சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார்.

நடிகையின் பேச்சு
அண்மையில் ஒரு பேட்டியில் அனுயா பேசும்போது, அந்த மார்பிங் வீடியோவால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன், அந்த நேரத்தில் பிரச்சனையை நான் எப்படி எதிர்கொண்டேன் என்று எனக்கு தெரியவில்லை.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட வந்தது, ஆனால் அந்த எண்ணத்தை மாற்றியது குடும்பம் தான். இவர் இல்லை என்றால் நான் இன்று உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்.

என்னை அவர்கள் புரிந்துகொண்டு துணையாக இருந்ததால் தப்பித்தேன் என சோகமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.