விஜய்யின் கில்லி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் இப்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

0

விஜய்யின் கில்லி
விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் வெற்றிப் படமாக அமைந்த படம் கில்லி.தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் என பலர் நடிக்க கடந்த 2004ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் Okkadu என்ற தெலுங்கு படத்தை தழுவி எடுக்கப்பட்டது. படம் அப்போதே ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளது.

படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் உள்ளது என்றே கூறலாம்.

நடிகரின் தங்கை
படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிஃபர். புவனா என்ற கேரக்டரில் குழுந்தைத்தனமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

பல்வேறு படங்களில் நடித்துவந்த இவர் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறையு செய்து இருக்கிறாராம். 33 வயதாகும் ஜெனிபர் திருமணம் செய்துகொள்ளாமல் தனது தொழிலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.

இவர் நேச்சர்ஸ் ஜாய் (Natures Joy) என்ற பெயரில் ரசாயனம் கலக்காத பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.