இளையராஜா வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட பவதாரிணி உடல் போட்டோவுடன் இதோ- அடக்கம் எப்போது?

0

பவதாரிணி
நேற்று இரவு (ஜனவரி 25) தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வந்த சோகமான செய்தி தான் இசையமைப்பாளர் இசையராஜா மகள் பவதாரிணி உயிரிழப்பு.புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் நோயை பற்றி சில மாதங்கள் முன்பே அறிந்துள்ளார். சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் புற்றுநோய் 4வது ஸ்டேஜை அடைந்ததால் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

உடல் அடக்கம்
நேற்றே இளையராஜா இலங்கை சென்றுவிட இன்று காலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்று அங்கு சென்று தனது அக்காவின் உடலை சென்னை கொண்டு வந்துள்ளார்.

தற்போது பவதாரிணியின் உடல் தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு பவதாரிணியின் உடல் சொந்த ஊராக தேனிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறதாம்.

நாளை தேனி பண்ணை புரத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.