கடைசி 4 நாட்கள் அப்படி ஒரு கஷ்டம் – முதன்முறையாக பிக்பாஸ் 7 பற்றி பேசிய அர்ச்சனா! மக்களுக்கு நன்றி..!

0

பிக்பாஸ் 7
தமிழ் சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் பல நாட்களுக்கு ஓடும், ஆனால் பிக்பாஸ் அளவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி எதுவும் இல்லை.அப்படிபட்ட நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது, இந்த 7வது சீசன் வெற்றியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டு பிரம்மாண்ட மேடையில் அறிவிக்கப்பட்டார்.

எப்போதும் பிக்பாஸ் வெற்றியாளர் மீது ரசிகர்கள் கொஞ்சம் எதிர்மறை விமர்சனம் வைப்பார்கள், ஆனால் இந்த 7வது சீசன் வெற்றியாளர் அர்ச்சனா குறித்து எந்த மோசமான விமர்சனமும் வரவில்லை.

முதல் வீடியோ
இந்த நிலையில் பிக்பாஸ் 7 வெற்றியாளர் அர்ச்சனா நிகழ்ச்சி முடிவடைந்து, நிறைய கொண்டாட்டங்கள் முடித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, பிக்பாஸ் ஜெயித்தது பிஆர் வைத்து தான் என்கிறார்கள், அதை கேட்கும் போது சிரிப்பாக இருக்கிறது.

பி ஆர் வைத்து பிக்பாஸ் ஜெயிக்க வேண்டும் என்றால் ஏன் இந்த நிகழ்ச்சி திரைப்பட வாய்ப்புகள் வாங்கி இருப்பேனே. பிக்பாஸ் ஜெயித்தவர்கள் எத்தனை பேர் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்களே சொல்லுங்கள்?.

இதெல்லாம் குறிப்பிட்ட காலம் தான் பிரபலம் கிடைக்கும். நான் வெற்றிபெறுவேன் என்று பெரிய அளவில் நம்பவே இல்லை, அதுவும் அந்த கடைசி வாரத்தில் நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும், சொல்ல முடியாத அளவிற்கு அந்த நேரத்தில் நான் வேதனையில் இருந்தேன்.எனக்கு 19 ஆயிரம் கோடி ஓட்டு கிடைத்திருக்கிறது, இது எனக்கு ரொம்பவே சந்தோஷம் என பேசியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.