நம்ம உதயநிதி ஸ்டாலினா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க..!

0

உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவர். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார்.

இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.விஜய், திரிஷா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.

அரசியல் வாரிசு, பிரபலத்தின் பேரன் என நிறைய அங்கீகாரத்துடன் சினிமாவில் நடிகராக களமிறங்கியவர் உதயநிதி ஸ்டாலின். நடிக்க வருவதற்கு முன் படங்கள் தயாரிப்பது, விநியோகம் செய்வது என நிறைய படங்கள் செய்துள்ளார்.அடுத்தடுத்து காமெடி, காதல் படங்கள் நடித்துவந்த உதயநிதி கொஞ்சம் தரமான கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்தார். அப்படங்கள் மூலம் மக்களின் பெரிய ஆதரவையும் பெற்றார்.

இப்போது தனது தந்தையுடன் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.இப்படி பல விஷயங்களில் பணிபுரிந்துவரும் உதயநிதி, கிருத்திகா என்பவரை காதல் திருமணம் செய்தார் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

உதயநிதி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அந்த புகைப்படம் இதோ,

Leave A Reply

Your email address will not be published.