31 வயதில் திருமணமாகாத நடிகை சாய் பல்லவி!! நிச்சயத்தை முடித்த அவரின் தங்கை பூஜா கண்ணன்…!

0

மலையாளத்தில் கடந்த 2015 வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தத படம் பிரேமம். இப்படத்தில் மலர் டீச்சராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். 31 வயதான சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை இருக்கிறார். சமீபத்தில் கூட சமுத்திரகனி நடிப்பில் வெளியான சித்திரம் செவ்வானம் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகினார் பூஜா.

தற்போது தன் காதலரை முதன்முதலாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் பூஜா கண்ணன். அக்கா சிங்கிளாக இருக்கும் போது தங்கை பூஜா கண்ணன் காதலருடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

விரைவில் இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்த நிலையில் பூஜா கண்ணனுக்கும் அவரது காதலர் வினீத் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிந்ததும் சாய் பல்லவி, பூஜா கண்ணன் உள்ளிட்ட அவரது உறவினர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.