அவர் தான் தாலி எடுத்து கொடுக்கணும்.. பாவனி உடன் திருமணம் பற்றி அறிவித்த அமீர்..!

0

பிக்பாஸ் பிரபலங்களான அமீர்- பாவனியின் திருமணம் எப்போது நடக்கப்போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.அமீர் பவானி திருமணம்
பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். தமிழில் சின்னத்திரை நடிகையாகப் பல சீரியல்களில் நடித்து அறிமுகமானவர்.இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நிலையில் இவரது கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து இறந்துவிட்டார்.இதனால் மனம் உடைந்து போன பவானி சீரியல்களை விட்டு சற்று விலகி இருந்தார். இதன் பின்னர் பாவனி சின்னத்தம்பி என்னும் சீரியலின் மூலம் ரீ என்றி கொடுத்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு செல்வாக்கான இடத்தைப் பிடித்தார் பாவனி. இதற்குப் பின்னர் தான் பாவனிக்கு பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது .இதில் கலந்துகொண்ட பாவனி அந்த நிகழ்ச்சியில் தன்னுடன் இருந்த சக போட்டியாளரான அமீரை காதலிப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இவர்களின் காதல் வாழ்க்கை.

பாவனி, அமீரை விட வயதில் மூத்தவர். இருந்தாலும் வயது காதலுக்கு தடை இல்லை என சொல்லி இருவரும் காதலித்து வருகிறார்கள். தற்போது இவர்கள் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் அமீர், விஜே பிரியங்காவின் 15 கால கலை வாழ்க்கையை கொண்டாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என்ற கேள்விக்கும் பதில் கூறியிருந்தார்.

பாவனி என்னுடன் இருப்பதற்கு முக்கிய காரணம் பிரியங்கா. அதனால் எங்கள் திருமணத்திற்கு பிரியங்கா தான் மாங்கல்யம் எடுத்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இவ்வாறு கூறுகையில் எங்கள் திருமணம் இந்த ஆண்டு நடந்துவிடும். என அமீர் கூறியிருந்தார்.நீண்ட நாட்களாக அமீர், பாவனி திருமணம் எப்போது நடக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.