இப்போ இது தேவையா? வயிற்றில் குழந்தையோடு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட அமலா பால்..!

0

வயிற்றில் குழந்தையோடு அமலாபால் வெளியிட்ட புகைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.அமலாபால்
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால்.இவர் நடிப்பில் வெளியான வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்கள் சரியான ஒரு இடத்தை உருவாக்கி தராவிட்டாலும் அதன் பிறகு வெளியான “மைனா” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அமலாபால் 2014-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

விவாகரத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் பல சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்து சினிமாவிலிருந்து முற்றாக விலகி இருந்தார்.அந்த வகையில், திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய இரண்டாவது காதலரை அறிமுகம் செய்து திருமணமும் செய்து கொண்டார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலாபால் கணவருடன் கவர்ச்சியான ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அமலாபாலை விமர்சித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave A Reply

Your email address will not be published.