வெற்றிக் கோப்பையோடு அர்ச்சனா சந்தித்த முதல் நபர் யார் தெரியுமா? வைரல் புகைப்படம்..!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற அர்ச்சனா வெற்றிக் கோப்பையுடன் முதல் முதலாக யாரை சந்தித்தார் என்ற புகைப்படம் வைரலாகி வருகின்றது.பிக் பாஸ் அர்ச்சனா
பிரபல ரிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7ல் அர்ச்சனா டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.பிக் பாஸ் வரலாற்றிலேயே இவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாராம். மேலும் எந்தவொரு வைல்டு கார்டு போட்டியாளரும் வெற்றி பெற்றதில்லை.

ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற போட்டியாளரில் ஒருவர் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

கோப்பையுடன் ஆசிரியரை சந்தித்த அர்ச்சனா
இந்நிலையில் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதில் தனது ஆசான் பிரவீன் என்பவரை நேரில் சென்று வாழ்த்து பெற்றுள்ளார். பிரவீன் என்பவர் சின்னத்திரை நாடகங்களில் இயக்குனராக இருந்து வருகின்றார்.

சரவணன் மீனாட்சி தொடரை பிரவீன் இயக்கியது குறிப்பிடத்தக்கது. அவரிடம் பாடம் பயின்றி மிகப்பெரிய இடத்தை அடைந்திருக்கும் அர்ச்சனா அவரது கையிலேயே கோப்பையை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.