மறக்க முடியாத கேப்டன் விஜயகாந்த், நல்ல உள்ளம்- நினைவுகூர்ந்த பிரபலங்கள்..!

0

விஜயகாந்த்
தமிழ் சினிமா மக்கள் எதிர்ப்பார்த்த ஒரு அரசியல் பிரபலம் விஜய்காந்த்.சினிமாவில் தனி நபராக பல பிரச்சனைகளை தீர்த்த இவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக முதல்வர் கூட ஆவார் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது. அப்படி மிகவும் மும்முரமாக அரசியல் களத்தில் விளையாடி வந்தவர் ஒருகட்டத்தில் எதிர்க்கட்சி என்ற அளவிற்கு வளர்ந்தார்.

மிகவும் வேகமாக பணியாற்றி வந்தவருக்கு உடல்நிலை கைகொடுக்கவில்லை. உடல்நிலை மிகவும் மோசமாக அப்படியே வீட்டிலேயே முடங்கிவிட்டார், பின் மக்கள் அவர் நலமுடன் வீட்டில் இருந்தாலே போதும் என்று பிராத்தனை செய்தனர்.

ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை, கடந்த டிசம்பர் 28ம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவர் இறந்த பிறகு விஜயகாந்த் எவ்வளவு நல்லது செய்துள்ளார் என்பது அனைவரும் பேட்டி கொடுக்கும் போது தெரிகிறது.

தற்போது அவரை நினைவுகூறும் வண்ணம் பிரபலங்கள் ஒன்றாக கூடி விஜயகாந்த் குறித்து பேசி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.