ரக்ஷிதா வெளியிட்ட ஒற்றைப் பதிவு… தினேஷின் கனவிற்கு வைத்த முற்றுப்புள்ளி..!

0

நடிகை ரச்சிதாவின் கணவரான தினேஷ் தனது மனைவியை பிரிந்த நிலையில், அவருடன் ஒன்று சேர்ந்துவிடுவோம் என்ற கனவில் பிக் பாஸ் வீட்டிலிருந்து சென்றுள்ள நிலையில் ரச்சிதா போட்டுள்ள பதிவு அதிர்ச்சியடைய வைத்துள்ளது.நடிகை ரச்சிதா
கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. பல தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை ரக்ஷ்தா காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்ட பிறகு இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரக்ஷிதாவை வனிதாவின் முன்னாள் கணவரான ராபர்ட் மாஸ்டர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

ஆனால் பிக் பாஸிலிருந்து வெளியேறிய பின்பு அவரவர் வேலையை பார்த்து வருகின்றனர். ஆனால் ரச்சிதா தனது கணவர் தினேஷ் குறித்து எந்தவொரு வார்த்தையும் அங்கு பேசவில்லை.

பிக் பாஸ் வீட்டில் தினேஷ்
தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு நான்காவது இடத்தை பிடித்த தினேஷ், வெளியே சென்றதும் நிச்சயம் ரச்சிதாவுடன் வாழ வேண்டும் என்று கூறியிருந்தார்.ஆனால் ரச்சிதா அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று உறுதியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது ‘புரிஞ்சா சரி.. நோ மீன்ஸ் நோ’ என குறிப்பிட்டு இன்ஸ்டாவில் ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டு இருக்கிறார் ரச்சிதா. தினேஷ் அந்த அளவுக்கு ரச்சிதாவிடம் நடந்துகொண்டாரா என ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.