விஜயகாந்த் இறந்த சில நாளில் மாற்றப்பட்ட பெயர்… அதிருப்தியில் ரசிகர்கள்..!

0

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ந்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.நடிகர் விஜயகாந்த்
தேமுதிக கட்சியில் தலைவராகவும், எதிர் கட்சிக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்த விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல்நலக் குறைவினால் உயிரிழந்தார்.

பல லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் சந்தன பேழைக்குள் விஜயகாந்த் விதைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விஜயகாந்தின் ரசிகர்கள் இன்னும் இந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போதும் ஆயிரக்கணக்கான மக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இத்தருணத்தில் விஜயகாந்தின் சமூக வலைதளமான எக்ஸ் தள கணக்கின் பெயரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாற்றியுள்ளார்.

விஜயகாந்த் மறைந்து சில நாட்களிலேயே, அவரின் சமூக வலைதள கணக்கு நீக்கப்பட்டு வேறு பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் இடையே பேசுபொருளாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.