12 வருடங்கள் கணவருக்காக ரம்பா மறைத்து வைத்த பரிசு என்ன தெரியுமா? இந்திரன் கொடுத்த ஓபன் டாக்..!

0

தன்னுடைய வருங்கால கணவருக்காக ரம்பா எவ்வளவு வருடங்கள் காத்திருந்தார்? என்பதை ஓபனாக பகிர்ந்துள்ளார்.ரம்பா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா.இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட ரம்பா சுமாராக 14 வருடங்கள் சினிமாவிற்குள் வராமல் இருக்கிறார்.திருமணத்திற்கு பின்னர் எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் தலைகாட்டாத ரம்பா, தனது சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.கணவருக்காக மறைத்து வைத்த பரிசு
இப்படியொரு நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு கணவருடன் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில்,“ தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த காலத்தில் வருங்கால கணவர் குறித்து பாரிய எதிர்பார்ப்பு எனக்கும் சாதாரண பெண்கள் போல் இருந்தது.அப்போது ஒரு நாள் நான் வெளிநாட்டிற்கு ஷுட்டிங்கிற்காக சென்றிருந்த போது அங்குள்ள மக்களால் காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு ஒரு கார்ட்டை நான் பார்த்தேன்.அதனை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என முடிவு செய்து என்னுடைய அம்மாவிடம் பொய் கூறி பணம் வாங்கி அந்த கார்ட்டை வாங்கி விட்டேன்.அன்றிலிருந்து சரியாக 12 வருடங்களாக வருடாந்தம் காதலர் தினம் வரும் போது தன்னுடைய கணவருக்கு காதலர் தினம் வாழ்த்து செய்தி எழுதி மறைவாக வைத்திருந்தேன்.

பின்னர் என்னுடைய படப்பிடிப்பு தளத்தில் நான் நினைத்தது போல் இவரை கண்டேன். பின்னர் என்னுடைய குடும்ப உறவினர் ஒருவரால் இந்திரனின் நம்பர் எனக்கு கிடைத்தது. ஆனால் என்னிடம் அவரிடம் பேசுவதற்கு தொலைபேசி இல்லை.இதனால் காலை 4 மணியளவில் எழுந்து என்னுடைய அண்ணாவின் தொலைபேசியை எடுத்து சரியாக 4 மணி நேரம் இந்திரனின் பேசினேன். எனக்கு அவரை பார்த்ததும் பிடித்து விட்டது. ஆனால் வீட்டில் நான் இதனை சொல்லவில்லை….” என சிரித்தப்படி கணவர் குறித்து பேசினார்.

ரம்பாவிற்கு இது ரொம்ப பிடிக்கும்
இதனை தொடர்ந்து கணவர், “ ரம்பாவை நான் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர் அவருடைய குடும்பத்தினருடன் வெளியில் வருவதால் அவரை இலகுவாக யாரும் பார்த்து விட முடியாது. ரம்பா போன் செய்து பேசிக் கொண்டிருந்தால் என்னுடைய விமான பயணத்தை விட்டுட்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ரம்பா நன்றாக சமைப்பார். அவர் சினிமாவில் சாதிக்க நினைத்த விடயம் எல்லாம் சாதித்து விட்டார். இனியும் சினிமாவிற்குள் என்ன செய்ய வேண்டும்? என நினைத்த அவர் என்னுடைய வியாபாரத்தை பார்த்து கொள்வதாக கூறினார்.தற்போது அதனையும் கவனித்து வருகிறார். எங்கு சென்றாலும் அந்த காதலர் தின கார்ட்டை அனுப்பி விடுவார். ரம்பா அப்போது கொடுத்த கார்டு கனடாவில் இருக்கிறது.

நான் வேலை விடயமாக இந்தியா வந்த போது என்னுடைய அலுவலகத்திலும் அந்த கார்ட்டின் பிரதி இருக்கின்றது… ” இப்படி தன் மனைவியுடன் மகிழ்ந்த தருணங்களை அழகாக பகிர்ந்துள்ளார்.அவர்களின் இந்த அளவிலான வெற்றிக்கு இருவரின் காதல் தான் காரணம் என இந்த பேட்டியை பார்க்கும் போது தோன்றுகின்றது.

“ரம்பாவிற்குள் இப்படியொரு குடும்ப பெண் இருக்கிறார் ”என்று இந்த காட்சியை பார்க்கும் அவரின் ரசிகர்களுக்கு புரியும்.இதனை தொடர்ந்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் காணொளியில் முழு பேட்டியை காணலாம்..

Leave A Reply

Your email address will not be published.