அடிதடி.. பஞ்சாயத்து: தேவயானி- ராஜகுமாரன் காதலை சேர்த்து வைத்த பிரபலம் யார்..?

0

தேவயானி – ராஜகுமாரன் காதல் விவகாரம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.தேவயானி
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தேவயானி.இவர் சரத்குமார், ரஜினி, கமல் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.சினிமாவில் டாப்பில் இருந்த போது இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திடீரென திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் அவர் நடித்த திரைப்படங்கள் யாவும் பெரியளவு வெற்றியை தரவில்லை.தேவயானி – ராஜகுமாரன் காதல்
இந்த நிலையில் தேவயானி – ராஜகுமாரன் காதல் விவகாரம் எப்படி கைக்கூடியது என்பதனை பிரபல விமர்சகர் செய்யாறு பாலு பத்திரிகையொன்றுக்கு பேட்டி அளித்தார்.

அதாவது, ராஜகுமாரன் ஒரு தலையாக தேவயானியை காதலித்து வந்த காலத்தில் “விண்ணுக்கும் மண்ணுக்கும்” என்ற படத்தினை இயக்கி வந்தார்.அந்த படத்தில் சரத்குமார் நடித்து வந்தார். ஆனால் இந்த படத்தின் ஷீட்டிங் பார்ட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த படம் பாதியில் இடை நிறுத்தப்பட்டது.

பின்னர் பல இன்னல்களுக்கு மத்தியில் ஒரு வழியாக படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் தோல்வியில் தான் முடிந்தது. காலங்கள் செல்ல தேவயானியும் ராஜகுமாரனின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார்.

பஞ்சாயத்து செய்த யார்?
தேவயானி வீட்டில் பாரிய எதிர்ப்பு இருந்த காரணத்தினால் இவர்கள் இருவரும் திருத்தணிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். அதற்கு சிங்கமுத்துதான் சாட்சி கையெழுத்து போட்டார்.

இதனை தொடர்ந்து தேவயானியின் அம்மா ஆட்களை கூட்டிக் கொண்டு மகளை அழைத்து செல்ல வந்தார்.அப்போது இருவரும் விக்ரமின் வீட்டிற்கு சென்று உதவி கேட்டனர். விக்ரம் பஞ்சாயத்து செய்து வைக்க, பிரச்சினை முடிவுக்கு வந்து இன்று வரை அவர்கள் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்” என்று பேசினார்.

 

Leave A Reply

Your email address will not be published.