மீண்டும் தனது 24 வயது காதலியுடன் இணைந்தாரா நடிகர் பப்லு- வைரலாகும் போட்டோ..!

0

நடிகர் பப்லு
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் வேடத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரித்விராஜ் என்கிற பப்லு.சினிமாவில் இவர் நடிக்க ஆரம்பித்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது, தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.

இப்போது கடைசியாக இவர் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் மற்றும் ரஷ்மிகா நடிக்க வெளியான அனிமல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

குடும்பம்
இவர் பீனா என்பவரை திருமணம் செய்திருந்தார், இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஓரு மகன் உள்ளார்.முதல் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிய இவர் மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 30 வயது வித்தியாசம் இருக்கிறது.

இந்த நிலையில் தான் பிரித்விராஜ் தனது இரண்டாவது மனைவியை பிரிந்துவிட்டார் என செய்திகள் வந்தன, இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் இருந்து எடுத்துவிட்டார்கள்.

ஆனால் தற்போது அனிமல் பட வெற்றிவிழாவில் ஷீத்தல் மற்றும் பிரித்விராஜ் இருவரும் படக்குழுவுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாக இருவரும் இணைந்துவிட்டார்களா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.