பிரசன்னாவால் பொது இடத்தில் கண்கலங்கிய சினேகா.. கணவன், மனைவிக்குள் இப்படியா..!

0

சினேகா
திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் சினேகா – பிரசன்னா. கடந்த 2012ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது இரு பிள்ளைகள் உள்ளனர்.அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் அழகிய புகைப்படங்களை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

நடிகை சினேகா தற்போது Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி சின்னத்திரையில் நடைபெற்று வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இப்படி வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் பிசியாக இருக்கிறார். இந்த வாரம் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியில் தனது கணவர் பிரசன்னாவுடன் இணைந்து நடுவராக இருந்தார் சினேகா.

கண்கலங்கிய சினேகா
அப்போது வயதான தோற்றத்துடன் நடன ஜோடி ஆடிய நடனம் அனைவரையும் நெகிழ வைத்தது. இதைபார்த்துவிட்டு சினேகாவிடம் பிரசன்னா கூறிய வார்த்தை சினேகாவை கண்கலங்க வைத்துள்ளது.

வயதான பிறகும் கூட இதே போல் நான் சினேகாவுடன் இருக்க வேண்டும் என பிரசன்னா கூறினார். இதை கேட்டவுடன் சினேகாவை கண்கலங்கி அழுதார்.

Leave A Reply

Your email address will not be published.