திருமணமான 2 மாதத்தில் நடிகை அமலா பால் கர்ப்பம்!ரசிகர்கள் வாழ்த்து புகைப்படம் இதோ..!

0

பிரபல தென்னிந்திய நடிகையான அமலா பால் தான் கர்ப்பமா இருப்பதை சந்தோஷமான புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார்.மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அமலா பால், தொடர்ந்து, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், 2017ல் விவாகரத்து பெற்றார்.

இதன் பின்னர் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தியதுடன், சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

வெளிநாடுகளில் ஊர் சுற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டும் வந்தார்.இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அமலா பாலின் நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை அமலா பால் ஏற்றுக்கொள்வதையும் வீடியோவாக வெளியிட்டார்.

தொடர்ந்து கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்தினர்.இந்நிலையில் திருமணமாகி 2 மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

அந்த பதிவில், உங்களுடன் (கணவர் ஜகத் தேசாய்) வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதால், 1+1 = 3 என்று எனக்குத் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மிக அழகான சந்தோஷமான தருணங்களையும் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave A Reply

Your email address will not be published.