மகன் கேட்ட ஒரு கேள்வி சுக்குநூறாக நொறுகிப்போன நெப்போலியன் அதனால் எல்லாத்தையும் தூக்கிபோட்டு விட்டு அமெரிக்காவில் செட்டிலாகிய பிரபல நடிகர்..!,

0

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக 90ஸ் காலக்கட்டத்தில் திகழ்ந்து வந்தவர் நடிகர் நெப்போலியன். சில ஆண்டுகளுக்கு முன் தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். உடல் நிலை சரியில்லாத அவரது மகனுக்காக அமெரிக்காவில் பல தொழில்களை ஆரம்பித்து நல்ல ஒரு தந்தையாக பெயர் எடுத்திருக்கிறார்.

சமீபத்தில் கூட அவரது 60 வயது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன மகன் பற்றி பேசி அழுதிருக்கிறார். 17 வயதுக்கு பின் இப்படியான குழந்தை இருப்பார்கள் என்று சொன்னபோது தினமும் நானும் என் மனைவியும் அழுவோம்.

 

அமெரிக்காவில் சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்து மகனுக்கான எல்லாவற்றையும் செய்தோம். அப்போது அங்கே (இந்தியா) எனக்கு வேண்டாம், எல்லோரும் வீல் சேரில் இருப்பதை ஒருமாதிரி பார்க்கிறார்கள், இங்கே (அமெரிக்கா) அப்படி யாரும் பார்க்கவில்லை என்று கூறியதும் அரசியல் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டேன்.

அப்போது என் மகன் ஒரு கேள்வி கேட்டான், அப்பா இனிமேலும் நான் இப்படி தனியாக தான் இருக்கணுமா? திரும்பவும் அப்பா இல்லாமல் இருக்கணுமா? என்று கேட்டான்.

அப்போது முடிவு செய்தேன் அரசியல் வேண்டாம், அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை என்று கண்ணீருடன் பதிலளித்தார் நடிகர் நெப்போலியன்.

Leave A Reply

Your email address will not be published.