அட இவங்களா? சூர்ய வம்சம் பட இந்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு- வீடியோ..!

0

சூர்ய வம்சம் படத்தில் நடித்த சிறுமியின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.சூர்ய வம்சம்
தமிழ் சினிமாவில் பிரபலமான படங்களில் ஒன்று தான் சூர்ய வம்சம்.இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.இன்று பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கக் கூடிய படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார்.

தேவையானியின் யதார்த்தமான நடிப்பு இந்த படத்தில் அழகாக காட்டப்பட்டிருக்கும் குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் வரும் கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.குட்டி பொண்ணு இவங்களா?
இந்த நிலையில், படத்தில் சரத்குமாரின் முறை பெண்ணாக பிரியா ராமன் நடித்திருக்கிறார்.

அவரின் சிறு வயது கதாபாத்திரத்தில் சிறுமியொருவர் நடித்திருக்கிறார் அவருடைய விவரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அதாவது, ரோசா பூ சின்ன ரோசாப்பூ.. பாடலில் குட்டி பொண்ணாக வருவது சீரியல் நடிகை நிவாசினி திவ்யா தான். இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “நீதானே எந்தன் பொன்வசந்தம்” என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “செல்லக்கிளி” என்ற தொடரின் நடித்து பிரபலமானார்.நிவாசினி திவ்யா நடிகை மட்டுமல்ல சின்னத்திரை தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் சூரிய வம்சத்தில் வரும் காட்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி “ அது தான்” என்பது போல் ஒரு ரீலை பகிர்ந்துள்ளார்.இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள், “ இது நீங்களா?” என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.