நடிகர் விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் பட நடிகையை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க..!

0

நடிகர் விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த், அரசியலில் கால்பதித்து கேப்டனாக கலக்கியவர் இப்போது நம்முடன் இல்லை.அவர் இருக்கும் போதை விட இறந்த பிறகு நிறைய விஷயங்கள் கேப்டனை பற்றி மக்களும், பிரபலங்களும் பேசியபடி உள்ளனர்.அன்றாடம் விஜயகாந்த் செய்த உதவி குறித்து வெளியே வருகிறது, அவர் மட்டும் உடல்நிலையில் ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் அரசியலில் சாதித்திருப்பார் என ரஜினிகாந்த் அவர்கள் கூட கூறியிருந்தார்.

அப்படிபட்ட ஒரு தலைவன் இன்று நம்முடன் இல்லை, தமிழ் மக்களுக்கு அவரது இறப்பு பெரிய துக்கத்தை கொடுத்துவிட்டது. தற்போது விஜயகாந்த் படத்தில் நடித்த ஒரு நடிகையின் தற்போதை புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது, யார் அவர் என்பதை பார்ப்போம்.

நடிகை யார்
விஜயகாந்த் நடிப்பில் 1984ம் ஆண்டு வெளியான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். வெள்ளசாமி என்ற அழுத்தமான ரோலில் விஜயகாந்த் நடிக்க ரேவதி, கவுண்டமணி, செந்தில், பரிமளம், ராதாரவி, வடிவுக்கரசி, கோவை சரளா என பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் வெள்ளைச்சாமியின் முறைப்பெண்ணான வைதேகி என்ற கதாபாத்திரத்தில் கன்னட நடிகை பரிமளா நடித்திருந்தார், ஒருசில காட்சிகளே நடித்தாலும் மக்கள் மனதில் அழுத்தமாக பதிந்துள்ளது.

கன்னட நடிகையான இவரின் புகைப்படம் அண்மையில் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இவரின் மகள் மேக்னா ராஜும் ஒரு நடிகை தானாம், மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும் ஆவார்.

Leave A Reply

Your email address will not be published.