சிறுவயதில் இருந்தே எங்கள் அப்பா சொல்லிக் கொடுத்தது இதுதான்- விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன்..!

0

விஜயகாந்த்
தமிழ் சினிமா கொண்டாடிய பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் சமீபத்தில் இந்த உலகை விட்டே சென்றுவிட்டார். அரசியலில் மிக விரைவிலேயே எதிர்க்கட்சி தலைவர் என்ற அளவிற்கு வளர்ந்தவர் விஜயகாந்த்வெற்றியை கண்ட நேரத்தில் உடல்நலக் குறைவால் அப்படியே வீட்டிலேயே முடங்கினார். அதன்பின் அவர் சினிமாவோ, அரசியலிலோ எதிலும் ஆக்டீவாக பணியாற்றவில்லை.

அடிக்கடி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த டிசம்பர் 28ம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது தேமுதிக அலுவலகத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நடிகரின் மகன்
விஜயகாந்த் மறைந்ததில் இருந்து அவர் பற்றிய நிறைய நல்ல விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. அப்படி விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் கொடுத்த பேட்டியும் வைரலாகி வருகிறது.

அதில் அவர், எங்கள் இருவருக்கும் சின்ன வயதில் இருந்து அப்பா சில விஷயங்களை சொல்லிக் கொடுத்து தான் வளர்ந்தார்.எங்கள் வீட்டில் வார இறுதியில் ஸ்பெஷலாக பிரியாணி செய்வோம், அப்போது சாலையில் செல்பவர்களுக்கு நானும் எனது அண்ணனும் தான் எங்களுடைய கையால் உணவளிப்போம்.

காலையில் எழுந்த உடனே என்னுடைய அப்பா இல்லாதவர்களுக்கு உணவு கொடுங்கள் என்று சொல்வார். மற்ற உதவி செய்வதை சின்ன வயதில் இருந்தே சொல்லிக் கொடுத்து தான் வளர்த்தார் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.