ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சிக்கிய பிரபல நடிகர் போட்ட பரபரப்பு டுவிட்..!

0

ஜப்பான் நிலநடுக்கம்
உலக மக்கள் அனைவரும் நேற்று ஜனவரி 1, 2024ம் வருடத்தை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள். பலருக்கு நேற்று நல்ல நாளாக அமைய ஒரு நாடே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது.எந்த நாடு என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான், ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 6க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக நேற்று தகவல் வர தற்போது உயிரிழப்பு செய்தி அதிகம் வருகிறது. இந்த தகவல் மக்கள் அனைவருக்குமே கொஞ்சம் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகரின் டுவிட்
பிரபலங்கள் பலரும் நியூஇயரை கொண்டாட வெளிநாடு செல்வது வழக்கம். அப்படி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜுனியர் என்.டி.ஆர் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்றுள்ளார்.

அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதனை உணர்ந்த என்.டி.ஆர் தனது டுவிட்டரில் பதிவு போட்டுள்ளார். அதில் அவர், ஜப்பானில் இருந்து இன்று வீடு திரும்பினேன். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்.

கடந்த வாரம் முழுவதும் அங்கேயே இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் அதிலிருந்து மீண்டு குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். வலிமையாக இருங்கள், ஜப்பான்” என்று பதிவிட்டுள்ளார்.

Back home today from Japan and deeply shocked by the earthquakes hitting. Spent the entire last week there, and my heart goes out to everyone affected.

Grateful for the resilience of the people and hoping for a swift recovery. Stay strong, Japan 🇯🇵

— Jr NTR (@tarak9999) January 1, 2024

Leave A Reply

Your email address will not be published.