எல்லாரும் உங்க வேலையை பாருங்க.. கணவர் விஷயத்தில் உச்சக்கட்ட கடுப்பில் ரக்சிதா- நடந்தது என்ன?

0

“ எல்லாரும் உங்க வேலையை பாருங்க.. ” என ரக்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரக்சிதா மகாலட்சுமி
தமிழ் சின்னத்திரை உலகில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கி வருபவர் தான் ரக்சிதா மகாலட்சுமி.இவர் தன்னுடைய இணைந்து நடித்த நடிகர் தினேஷை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.சுமார் ஏழு ஆண்டு காலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்த இந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளது.

தனித்தனியாக வாழ்ந்து வரும் தினேஷ் – ரக்சிதா விரைவில் விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகின்றது.இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கேற்று, தற்போது முன்னணி போட்டியாளராக மாறியுள்ளார்.

கடுப்பான பிரபலம்
பிக்பாஸ் வீட்டில் விசித்திரா, “அவரோடு யாரும் வாழ முடியாது.. அப்படி வாழ்ந்தால் ஓடித் தான் போக வேண்டும்” என்று அவர் ரச்சித்தா குறித்து பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.கடந்த வார இறுதியில் ரக்சிதா- தினேஷ் ஆகிய இருவரின் விவாகரத்து குறித்து பேசியதற்காக கமலஹாசன் அவர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு ரக்சிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் “ஆம் உண்மை எப்போதுமே கசக்கும், அதற்காக அது உண்மை இல்லை என்று ஆகிவிடாது.

இது என்னுடைய போராட்டம், நானே தனியாக போராடிக்கொள்கிறேன். எல்லோரும் உங்கள் வேலையை பார்த்தால் போதும். நாங்களும் எங்களுடைய வேலைகளை பார்க்கிறோம்” என்று கடுமையாக கூறியுள்ளார்.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன், “ரக்சிதாவிற்கு இப்படி கோபம் வருமா?” என ரசிகர்கள் கருத்துக்கள் பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.