விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட சந்தன பேழை விலை இத்தனை லட்சமா?

0

நடிகர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 28ம் தேதி காலை 6.10 மணிக்கு காலமானார்.அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அவருக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை அளித்தும், பலனின்றி மரணமடைந்தார்.

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் டிசம்பர் 29 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கும் அவரது கட்சி அலுவலகத்தில் தான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சந்தன பேழை விலை
நடிகர் விஜயகாந்த் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டு தான் அடக்கம் செய்யப்பட்டது. அதில் கேப்டன் என இரண்டு புறமும் எழுதப்பட்டு இருந்தது.

“புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்” என பெயர் மற்றும் அவர் பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த சந்தன பேழை பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. எம்ஜிஆர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களுக்கு செய்து கொடுத்த அதே நபர் தான் விஜயகாந்துக்கும் செய்து கொடுத்து இருக்கிறார்.

சந்தன பேழை செய்ய 1.25 லட்சம் ரூ. முதலில் கேட்டாராம் அவர். ஆனால் அதன் பின் 1 லட்சம் ரூபாய்க்கு இறுதியாக செய்து கொடுத்தாராம்.

Leave A Reply

Your email address will not be published.