நடிகர் விஜயகாந்த் வாழ்ந்த வீடு.. சொந்தங்கள் கதறி அழும் காட்சி இதோ நீங்களே பாருங்க..!

0

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.அவரின் பிரிவால் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் மதுரை மேல மாசி வீதியில் உள்ள விஜயகந்த் இல்லத்தில் அவரது உறவினர்கள் கதறி அழும் காணொலி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

மறைந்த நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் 1979ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான இனிக்கும் இளமை படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினார்.

விஜயகாந்த். பின் அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது சட்டம் ஒரு இருட்டறை படம் தான், இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

புலன் விசாரணை, சேதுபதி ஐபிஎஸ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், வானத்தைப் போல, தவசி, ரமணா என இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.54 புதிய இயக்குனர்களை தனது சினிமா பயணத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளார்.

பலரை வாழ வைத்த விஜயகாந்த் அவர்களின் இழப்பு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் மாத்திரமன்றி தமிழகம் முழுவதிலும் பாரிய தாக்கத்தை ஏற்பத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.