மறைந்த நடிகர் போண்டா மணி குடும்பத்திற்கு உதவிய நடிகர் விஜய்காந்த்- எவ்வளவு தெரியுமா?

0

போண்டா மணி
தமிழ் சினிமாவில் நாம் பார்த்து ரசித்த நடிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.அப்படி தான் அண்மையில் ஒரு பிரபலத்தின் மரண செய்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார்.அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகரின் உதவி
இந்த நிலையில் போண்டா மணி மறைவை கேள்விப்பட்ட விஜயகாந்த் உடனடியாக அவரது குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

இந்த பணத்தை நடிகர் மீசை முருகேசன், போண்டாமணி மனைவி மற்றும் மகனிடம் அளித்துள்ளனர்.

தனது வீட்டில் தனது தந்தை மட்டுமே சம்பாதித்து வந்த நிலையில் தனது குடும்பத்திற்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என போண்டாமணி மகன் வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

Leave A Reply

Your email address will not be published.